கொடிவேரி அணைக்கட்டு வேட்டுவ அரசர் கட்டிய அணை
- Posted on Sat Feb 5, 2022
- 1110 Views
கொங்கு நாட்டில் முதன் முதலில் பவானி ஆற்றுநீரை குளவாற்றூர் (தற்போதைய கொடிவேரி) என்ற இடத்தில் , நீரைத்தேக்கி கால்வாய் வெட்டிய பெருமை #வேட்டுவக்கவுண்டர் இனத்தின் செம்ப வேட்டுவர் குலத்தை சார்ந்த, வடகரை நாட்டை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஊராளி #செம்ப_வேட்டுவர் செயங்கொண்ட சோழ கொங்காள்வானைச் சாரும்
செயங்கொண்ட சோழ #கொங்காள்வான்
முதலாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் (கி.பி 1070 - கி.பி1125) , கொங்கு 24 நாட்டில் ஒன்றான வடகரை நாட்டு சிற்றரசாரன ஊராளி செம்ப வேட்டுவ குலத்தலைவனான செயங்கொண்ட சோழ கொங்காள்வான்-க்கு ஊராழ்வான் பொறுப்பு இருந்தது.
முதலாம்குலோத்துங்கனின் 55-வது ஆட்சி ஆண்டில் சோழ கொங்காள்வான் குளவாற்றூரில்(தற்போதைய கொடிவேரி) பவானி ஆற்றின் குறுக்கே பெரும் பெரும் பாறை கற்களைக்கொண்டு நீரைத் தேக்கி நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தினார்.
கொடிவேரி அணைக்கட்டு
சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையம் வழியில் சத்தியமங்கலத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் கொடிவேரி அணைக்கட்டு உள்ளது, இதன் பழையபெயர் குளவாற்றூர். கொடிவேரி கிராமம் கோபிச்செட்டிபாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியாகும்.
900 ஆண்டுகளுக்கு முன்பு கொடிவேரி பகுதிகள் அடர்ந்த மரங்கள் மற்றும் புலிகள் மற்றும் விலங்குகள் வாழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியாகும், இந்த காடுகளின் இடையில் தான் பவானி ஆற்றுநீர் வழித்தடமாகும் இந்த பகுதி இயற்கையாகவே இந்த பகுதி குளம் போல இருந்தது.
வடகரை நாட்டின் மாமன்னர் சோழ கொங்காள்வான் வடகரை நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்க நீர்த்தேக்கம் ஏற்படுத்த முடிவு செய்தார், அதற்கான உகுந்த இடத்தை தேர்வுசெய்ய நேரிடும்போது தான் இந்த குளவாற்றூர்(தற்போதைய கொடிவேரி) பகுதியை தேர்ந்தெடுத்தார் இந்த இடம் இரு கரைகளுக்கும் நீர்வழிப்பாதையை ஏற்படுத்த சரியான இடமாக அமைந்தது.
இங்கு நீர்த்தேக்க அணைக்கட்டு கட்டமைப்பதில் சிக்கல்கள் இருந்தது பாறைகளே இல்லாத இந்த பகுதியில் அணைக்கட்டு கட்டுவது மிகவும் சிரமமாக இருந்தது, அதனால் சத்தியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள கல்கடம்பூரில் (கம்பத்ராயன் மலையில்) இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன அந்த பாறைகளை கொண்டு பவானி ஆற்றுநீரை தேக்கினார்.
அணைக்கட்டு தொழிநுட்பம்
செயங்கொண்ட சோழ கொங்காள்வான் எதிர்கால சிந்தனையுடன் இரு கரை பகுதியில் வசிக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் சிறப்பான கட்டுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கால்வாய் கட்டுமானம்
அணையின் வடக்கு பக்கம் ஒரு கால்வாயும் முறையே அணையின் தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் ஊராளி செம்ப வேட்டுவர் சோழ கொங்காள்வான் வெட்டினார்.
கொடிவேரி அணைக்கட்டின் வடக்கு பகுதியில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கின்றது ஏறக்குறைய 10 கி.மீ வரை வெட்டினார் இந்த கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று மக்களால் அழைக்கப்படுகிறது, அதன் பிறகு பாசன வசதிக்காக சுமார் 42 கி.மீ வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது. கொடிவேரி அணைக்கட்டின் தெற்கு பகுதியில் உள்ள மற்றொரு கால்வாய் கவுந்தப்பாடி,மேட்டுப்பாளையம் வரை செல்கின்றது ஏறக்குறைய 15 கி.மீ வரை வெட்டினார் இந்த கால்வாய் தட்டப்பள்ளி கால்வாய் என்று மக்களால் அழைக்கப்படுகிறது, அதன் பிறகு பாசன வசதிக்காக சுமார் 26 கி.மீ வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இந்த அணைக்கட்டின் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசானவசதி பெற்றுவருகிறது. இதிலிருந்து கி.பி 11-ஆம் நூற்றாண்டிலேயே கொங்குநாட்டில் நீர்பாசன்வசதியை பெருக்கியவரிகள் வேட்டுவ ஆட்சியாளர்களே என உறுதியாக தெரிகிறது.
மணல்போக்கி தொழிநுட்பம்
அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது.
சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல்லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகள்
செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற் றையும் உள்ளே இழுத்து மறுபக்க
சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு...இவ்வளவு அரிய தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி ஊராளி செம்ப வேட்டுவர் சோழ கொங்காள்வான் இந்த அணைக்கட்டு கட்டினார்.இதனால் இந்த அணைக்கட்டு தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.
நீர் மேலாண்மை தொழிநுட்பம்
தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப்பப்படுவதில்லை. மேலும்,அணைக்கட்க்கு கீழ் இருக்கும் விவசாயிகள் பாதிக்கப்படாத அளவில் நீர் வரத்து எந்தவிதத்திலும் குறையாதவண்ணம் ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று, அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும்.கசிவுநீரை பாசனத்துக்கு செல்லும் வகையில் கால்வாய்களை ஊராளி செம்ப வேட்டுவர் சோழ கொங்காள்வான் வெட்டினார். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவையானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது.
தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின்
பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்று சேர்கிறது.இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங்கராயன் அணைக்கட்டு
கல்வெட்டு சான்று
பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டு சான்று தற்பொழுது ஈரோடு அருங்காட்சியகத்தில் உள்ளது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத் 2. துங்க சோழதேவற்
3. கு யாண்டு ஐம்பத்து அ 4. ஞ்சாவது வடகரை நாட்டு
5. க் குளவாற்றூரிலருக்கும் 6. ஊராளி செம்ப வேட்டுவ
7. ன் தொண்டயன் பிள்ளா 8. நான சயங்கொண்டசோழ
9. க் கொங்காள்வானேன் இக்குள 10. ம் அட்டிக்
11. காலும் வெட்டி 12. விச்சேன் இது
13. ஆக்குவான் பா 14. தம் எந்தலைமேல்
15. இது அழிப்பான் வழி 16. அறுவான்
இந்த கல்வெட்டு வரியில் இக்குளம் அட்டிக் காலும் வெட்டிவிச்சேன் என்று உள்ளது.
ஊராளி செம்ப வேட்டுவன் தொண்டயன் பிள்ளா நான் சயங்கொண்டசோழன் உருவாக்கியது.