வீரமங்கை செல்வி.கோமதி சிலம்பாட்டம் சுருள் வாள் வீச்சு போட்டியில் முதலிடம் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்

  • Posted on Sun Feb 13, 2022
  • 1120 Views

வீரமங்கை செல்வி.கோமதி அவர்கள்.நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு சிலம்பாட்டம் சுருள் வாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார் நமது வீரமங்கை செல்வி.கோமதி அவர்கள்.


சிவகிரி அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கோமதி பழனிச்சாமி. இவர் இந்திய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு சிலம்பாட்டம் சுருள் வாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார் நமது வீரமங்கை செல்வி.கோமதி அவர்கள்.


பள்ளிப் பருவத்திலேயே பல தங்கப்பதக்கங்களை வென்று உள்ள மாணவி கோமதி அவர்கள் தனது சுற்றுவட்டார கிராமப்புற குழந்தைகளுக்கும் தான் கற்ற சிலம்பக் கலையை பலருக்கும் கற்பித்து வருகிறார். தனது மாணவர்களையும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறச் செய்து பரிசுகளை பெற வைத்துள்ளார். மேலும் சிலம்பக் கலையை கற்றுக் கொண்டதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதாக கூறுகிறார். நமது வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி கோமதி பழனிச்சாமி அவர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். கோமதி பழனிச்சாமி அவர்களுக்கு வேட்டுவர் டிவி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.