அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது P.K.ஆதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

  • Posted on Tue Jan 18, 2022
  • 1036 Views

இளம் சாதனையாளர் விருது P.K.ஆதவ் அவர்களுக்கு ழங்கப்பட்டது 


புளியம்பட்டி மேல்முடுதுறையை சேர்ந்த பொன்னுசாமி கிருஷ்ணவேணி தம்பதிகளின் மூத்த மகன் P. K. ஆதவ். புளியம்பட்டி Spring dale Public Schools இல் முதல் வகுப்பு படிக்கும் இவர் கடந்த வருடம்  மாநில அளவில் நடைபெற்ற  ஸ்கேட்டிங் விளையாட்டில்  மூன்றாம் இடத்தை பிடித்து தேசிய அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த 26.12.2021 அன்று அப்துல் கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் புளியம்பட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கோவை மண்டலத்தின் அப்துல் கலாம் இளம் சாதனையாளர் விருது P.K.ஆதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதானது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு. பொன்ராஜ் அவர்களால் P. K. ஆதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. செல்வன் P.K.ஆதவ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.