வேட்டுவ அரசர் தினம் தை 1

  • Posted on Tue Jan 18, 2022
  • 843 Views

வேட்டுவ அரசர்கள்  தினம் தை 1
வேட்டுவர் என்றால் தலைவன் வேட்டுவர் என்றால் பாதுகாவலன் வேட்டுவர் என்றால் அரசன் என்று சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகிறது.

வேட்டுவர்கள் குறிஞ்சி நிலத்தின் அரசர்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. குறிஞ்சி நிலம் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் திருப்பதி வரை பரந்து விரிந்து உள்ளது. இந்த நிலத்தின் பூர்வீக மக்களான வேட்டுவர்கள் இனக் குழுக்களாக வாழ்ந்து, வேளிராக  வளர்ந்து, அரசர்களாக மாறி இந்த நிலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்கள் மொழி, வணிகம், விவசாயம் போன்ற துறைகளில் தனி கவனம் செலுத்தி தமிழர்களையும் தமிழ் மொழியையும் உலக அளவில் பெருமையடைய செய்துள்ளார்கள். அத்தகைய பெருமை மிக்க குறிஞ்சிநில வேட்டுவ அரசர்கள் 40க்கும் மேற்பட்டோர் குறிஞ்சி நிலத்தை ஆட்சி செய்து உள்ளார்கள். அவர்களின் பெருமையை போற்றும் வகையில் நாம் இந்த வேட்டுவ அரசர் தினத்தை கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் வேட்டுவர் தின வாழ்த்துக்கள் சொல்ல நமது சமுதாயத்தின் முன்னோடிகள் வேட்டுவர் டிவியில் தங்கள் வாழ்த்துக்களை மற்றும் கருத்துகளையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.